Paristamil Navigation Paristamil advert login

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்

5 பங்குனி 2025 புதன் 12:00 | பார்வைகள் : 3004


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 5 ஆம் பிரதமர்  மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் பயணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நில இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டபோது பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பிரகாரமே மோடியின் இந்தப் பயணம் இடம்பெற உள்ளது.

இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தருவார் என்று இந்திய உயர் ஸ்தானிகராலயமும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்