Le Casse du Siècle - திருடன் கையில் பாதுகாப்பு பெட்டகம்!!
2 ஆடி 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18194
வங்கிகளை கொள்ளையடிப்பதும்.. காவல்துறையினர் திருடர்களை பிடிப்பதும் எப்போதும் கேள்விப்பட்ட ஒன்றுதான். ஆனால் 1976 ஆம் ஆண்டு நடந்த Société Générale வங்கி கொள்ளைதான், இவற்றுக்கெல்லாம் ராஜா!!
பிரெஞ்சு புதினத்தில் இந்த கொள்ளை தொடர்பாகவும், கொள்ளையன் Albert Spaggiari தொடர்பாகவும் நிறைய தகவல்கள் பார்த்தாயிற்று. இந்த கொள்ளையன் Albert Spaggiari, வங்கியை கொள்ளையிடுவதற்கு முன், என்னவாக இருந்தான் தெரியுமா?
பிரான்சின் தெற்கு பிராந்தியங்களில் அலைந்து திரிந்து வளர்ந்து வந்தான் Spaggiari. அவனது 17 வயது வயதில், சிறு சிறு கொள்ளைகளில் ஈடுபட்டான். இந்தோனேசியாவில், பாராசூட் குழுவில் இருந்த இவனை, திருட்டு வேலையில் ஈடுபட்டதால், பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான்.
அதன் பின்னர் அவன் சில மாதங்களில் விடுவிக்கப்பட்டதும், ஆப்பிரிக்க நாடான Senegal க்கு செல்கிறான். அங்கு, வங்கிகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு பெட்டகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறான்.
அவனுக்கு, வாடிக்கையாளர்கள் சாவியினைத் தொலைத்தால்.. அதை உடைத்து கொடுக்கும் வேலை வழங்கப்படுகிறது. அதாவது மிக பாதுகாப்பான பெட்டகம் என நம்பப்படுகிற 'ஒரே ஒரு சாவி' உள்ள பாதுகாப்பு பெட்டகத்தை திறக்கும் பணி இவனது. இந்த பணி, Spaggiariக்கு ஒரு வித போதையைத் தருகிறது..!! வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியினைத் தொலைத்து விட்டு.. இந்த நிறுவனத்திடம் வர, அவர்கள் Spaggiari இடம் கொடுத்து உடைக்கச் சொல்ல... அதற்குள் நகைகள், ஆவணங்கள் என பல பொருட்களை பார்க்கவும்... ஆசை துளிர் விட்டது!!
அதன் பின்னர் பிரான்சுக்கு திரும்பி வருகிறான் Spaggiari. 'இந்த நூற்றாண்டின் வங்கி கொள்ளை!' (Le Casse du Siècle) என வர்ணிக்கப்படுகிறத அந்த Société Générale வங்கி கொள்ளை இடம்பெறுகிறது...!!