Paristamil Navigation Paristamil advert login

தமன்னாவின்ஆச்சரிய முடிவு..!

தமன்னாவின்ஆச்சரிய முடிவு..!

5 பங்குனி 2025 புதன் 14:11 | பார்வைகள் : 154


நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் பிரேக்கப் ஆகி பிரிந்து விட்டதாக பேசப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா, ’Lust Stories 2’ என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இருவரும் பல இடங்களில் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியானது. மேலும், விரைவில் விஜய் வர்மாவை தமன்னா திருமணம் செய்து கொள்வார் என்றும், திருமணத்திற்கு பின்னர் வாழ்வதற்காக ஒரு சொகுசு பங்களா வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

தமன்னாவும் சமீபத்தில் அளித்த பேட்டியில், விரைவில் தனது திருமணம் நடக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தமன்னா மற்றும் விஜய் வர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அந்த செய்தி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இருப்பினும், இருவரும் நல்ல நண்பர்களாக தொடர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதிருந்தாலும், ஊடகங்களில் "தமன்னா - விஜய் வர்மா பிரிவு" தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்