Paristamil Navigation Paristamil advert login

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இத்தனை கதாநாயகிகளா?

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் இத்தனை கதாநாயகிகளா?

5 பங்குனி 2025 புதன் 14:44 | பார்வைகள் : 210


அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.அட்லீ இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். பின்னர் இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். 

அதன் பின்னர் இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் இந்த படம் ஆனது கிட்டத்தட்ட ரூ. 500 போடி பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 

அடுத்தது இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் ஜான்வி கபூர் தவிர இன்னும் 4 கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என தகவல் கசிந்துள்ளது. அதன்படி அமெரிக்க, கொரிய மொழி நடிகைகளை இறக்க உள்ளாராம் அட்லீ. அத்துடன் மற்றுமொரு இந்திய நடிகை ஒருவரும் வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்தில் எத்தனை நடிகைகள் நடிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்