தனுஷின் இரண்டு படங்கள் ரிலீஸ் தள்ளி போகிறதா? '

5 பங்குனி 2025 புதன் 14:49 | பார்வைகள் : 568
தனுஷ் நடித்து இயக்கிய "இட்லி கடை" என்ற திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் "இட்லி கடை" திரைப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே தேதியில் அஜித்தின் "குட் பேட் அக்லி’ திரைப்படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், "இட்லி கடை" வெளியீட்டில் மாற்றமில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது "குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால், "இட்லி கடை" படக்குழுவினர் குழப்பத்தில் இருப்பதாகவும், இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 21க்கு மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே தனுஷின் "குபேரா" திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. எனவே, அடுத்தடுத்து இரண்டு மாத இடைவெளியில் தனுஷின் "இட்லி கடை" மற்றும் "குபேரா" ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.