நடிகராக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

5 பங்குனி 2025 புதன் 14:58 | பார்வைகள் : 607
கிரிக்கெட் வீரர் ஒருவர் தெலுங்கு படம் மூலம் இந்திய சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். யார் அவர் என்பது குறித்து பார்ப்போம்.
இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் ‘ராபின்ஹூட்’. இந்தப் படத்தை ரவி சங்கர் தயாரிக்கிறார். படத்தில் ஸ்ரீலீலா, லால், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் படத்தின் சர்ப்ரைஸை வெளிப்படுத்தியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய தயாரிப்பாளர் ரவிசங்கர், “நான் இதை சொல்வதற்காக படத்தின் இயக்குநர் வெங்கி என்னை மன்னிக்கவேண்டும்.
‘ராபின்ஹுட்’ படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கிறார். இந்திய சினிமாவில் அவரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம்” என்றார். இந்தப் படம் வரும் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டேவிட் வார்னரை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.