Paristamil Navigation Paristamil advert login

65 வயதுக்கு மேற்பட்ட 20 மில்லியன் மக்கள்! - ஒரு ஆச்சரிய கணக்கீடு!!

65 வயதுக்கு மேற்பட்ட 20 மில்லியன் மக்கள்! - ஒரு ஆச்சரிய கணக்கீடு!!

1 ஆடி 2017 சனி 10:30 | பார்வைகள் : 18350


பிரெஞ்சு மக்கள் தொகை குறித்த பல சுவாரஷ்யமான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் INSEE நிறுவனம் எடுத்திருந்த தற்போதைய மக்கள் தொகை 66.9 மில்லியன். (ஜனவரி 1, 2016 இல்) 
 
இது ஒருவ்பக்கம் இருக்க... 2050 ஆம் ஆண்டில் இந்த மக்கள் தொகை மிக ஆபாய கட்டத்தை அடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையை கணக்கிடும் INSEE நிறுவனம் தெரிவிக்கும் போது, 2050 ஆம் ஆண்டில், பிரான்சில் மொத்தம் 77 மில்லியன் மக்கள்தொகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Pays de la Loire மாகாணத்தில் தான் அதிகளவு மக்கள் தொகை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் 13.2 மில்லியன் பேர் வசிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தவிர, மிக சுவாரஷ்யமாக, 2050 ஆம் ஆண்டில், பிரான்சில் 77 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் எனவும், இதில் 20 மில்லியன் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்