உக்ரேனுக்கு பிரெஞ்சு இராணுவத்தை அனுப்புவதை விரும்புகின்றனரா பிரெஞ்சு மக்கள்..? - கருத்துக்கணிப்பு!!

5 பங்குனி 2025 புதன் 17:52 | பார்வைகள் : 1665
ரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், உக்ரேனுக்கு பிரெஞ்சு இராணுவத்தை அனுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இதுவரை அதுபோன்ற தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற போதும், பிரெஞ்சு மக்கள் இது தொடர்பில் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
”உக்ரேனுக்கு பிரெஞ்சு இராணுவத்தை அனுப்புவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?” என நேரடியாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 65% சதவீதமானவர்கள் ‘இல்லை’ (NON) என கருத்து தெரிவித்துள்ளனர்.
35% சதவீதமானவர்கள் ‘ஆம்’ (OUI) என தெரிவித்துள்ளனர்.
(நன்றி CNEWS)
பிரெஞ்சு இராணுவத்தை உக்ரேனுக்கு அனுப்பவதால் அது மூன்றாம் உலகயுத்தத்துக்கு வழிவகுக்கும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேற்படி கருத்துக்கணிப்பை l’institut CSA நிறுவனம் CNEWS, Europe 1, le JDD போன்ற ஊடகங்களுக்காக மேற்கொண்டிருந்தது.