ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியத்தை மூடி விடலாம் : ராமதாஸ்

6 பங்குனி 2025 வியாழன் 08:57 | பார்வைகள் : 3493
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ஒரு ஆசிரியர் கூட தேர்வு செய்யப்படாத நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், 2024ல், அரசுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. 2023ல் தேர்ந்தெடுக்கப்பட்ட, 3,192 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்னும் பணியாணை வழங்கப்பட வில்லை. 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க, கடந்த ஆண்டு ஜூலையில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும் கூட, இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரலில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பு பெறாமல் தவித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை குறித்த நேரத்தில் தேர்வு செய்யவே, ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே ஒரு ஆசிரியரைக்கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால், அந்த வாரியம் எதற்காக இருக்க வேண்டும்; அதை மூடி விடலாமே?
அரசு பள்ளிகள் மீது அரசுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்தால், ஆசிரியர் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025