Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்து அபார வெற்றி! தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்…!

நியூசிலாந்து அபார வெற்றி! தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்…!

6 பங்குனி 2025 வியாழன் 04:31 | பார்வைகள் : 130


ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை(ICC Champions Trophy) கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா (108) மற்றும் கேன் வில்லியம்சன் (102) ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 362 ஓட்டங்கள் குவித்தது.

363 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் தெம்பா பவுமா ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் ஹென்ரிக்ஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பவுமாவுடன் இணைந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் அதிரடியாக விளையாடினர், பவுமா 56 ஓட்டங்களிலும், வான் டெர் டுசென் 69 ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து அணியை தோல்வி பாதைக்கு அழைத்து சென்றனர்.

டேவிட் மில்லர் மட்டும் தனி ஆளாக போராடி 67 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த விறுவிறுப்பான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்