இரத்தக்கறையுடன் Promenade des Anglais !!
22 ஆனி 2017 வியாழன் 17:30 | பார்வைகள் : 18289
ஜூலை தாக்குதலை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நீஸ் மாவட்டத்தின் Promenade des Anglais கடற்கரை பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
சாதாரணமாகவே மிக 'பிஸி'யான பகுதி இது. இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் கடற்கரை காற்றை அனுபவிக்க மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும். பல இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என எப்போதும் நீஸ் நகர மக்களுக்கு நெருக்கமான பகுதி இந்த Promenade des Anglais.
பல வருடாந்த நிகழ்வுகள், ஒருதடவை Tour de France (2013) போட்டி, பலதடவை Nice Carnival என பல நிகழ்வுகள் இடம்பெறுவது போலவே வருடாந்த சுதந்திர தினமும் (Bastille day) இங்கு கொண்டாடப்படுகிறது.
அன்று, ஜூலை 14, 2016. சுதந்திர தினத்தை வானவேடிக்கையுடன் பல்லாயிரம் மக்கள், Promenade des Anglais கடற்கரையில் கொண்டாடிக்கொண்டிருந்தர்கள்.
Mohamed Lahouaiej-Bouhlel எனும் 31 வயது பயங்கரவாதி ஒருவன், கனரக வாகனம் ஒன்றை வேகமாக கூட்டத்துக்குள் செலுத்தினான். குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லாமல் மொத்தம் 86 பேரை கொன்று குவித்தான்.
மொத்த தேசமும் அழுது கூக்குரலிட்டது. நாட்டையே உலுக்கி போட்ட தாக்குதல் அது. மொத்த பிரெஞ்சு தேசமும் சோகத்தில் மூழ்க.. நீஸ் நகர இளைஞர்கள் வேறு விதமாக புறப்பட்டார்கள். 'இதற்கு பின்னரும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. தைரியம் இருந்தால் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை நடத்துங்கள் பார்க்கலாம். இங்குள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு இராணுவம்!' என பயங்கரவாதத்துக்கு எதிராக களம் இறங்கினார்கள்.
இரத்தக்கறை படிந்த Promenade des Anglais கடற்கரையில், தாக்குதல் நடந்த ஒரே வாரத்தில் மீண்டும் கூட்டம் அச்சமின்றி கூடியது. இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த!! இம்முறை இரண்டுமடங்காக மக்கள் தொகை..