Paristamil Navigation Paristamil advert login

முட்டை விலை உயர்வால் அமெரிக்காவில் பிரபலமாகும் நிறுவனம்

முட்டை விலை உயர்வால் அமெரிக்காவில் பிரபலமாகும் நிறுவனம்

6 பங்குனி 2025 வியாழன் 04:40 | பார்வைகள் : 334


அமெரிக்காவில் முட்டை விலை கணிசமாக உயர்ந்துவருகிறது.

முட்டை விலை உயர்வை எதிர்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஒரு நிறுவனம்.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையரில் வாழும் Christine மற்றும் Brian Templeton என்னும் இருவர் ஒரு நிறுவனத்தைத் துவக்கியுள்ளார்கள். அதன் பெயர், Rent the Chicken நிறுவனம்.
 
அதாவது, இந்த நிறுவனம் இரண்டு கோழிகளை வாடகைக்குக் கொடுக்கும். கோழிகள் வாடகை ஆறு மாதங்களுக்கு 600 டொலர்கள்.

கோழிகளுடன், அவற்றிற்கான உணவு, ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது தேவை ஏற்பட்டால், உதவியும் வழங்கப்படும். இரண்டு கோழிகள் வாரம் ஒன்றிற்கு 12 முட்டைகளை இடும்.

இந்த விடயம் ட்ரெண்டாகி வரும் நிலையில், வாடகைக்கு கோழி வாங்கும் பலர், கோழிகளை பிரிய மனமில்லாமல் தாங்களே வைத்துக்கோள்கிறோம் என்று கூற, Rent the Chicken நிறுவனம் பிரபலமாகிவருகிறது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்