Paristamil Navigation Paristamil advert login

”ஐரோப்பிய இராணுவத்தின் உதவியுடன்....” ஜனாதிபதி மக்ரோன் உரை! - முழு தொகுப்பு!!

”ஐரோப்பிய இராணுவத்தின் உதவியுடன்....” ஜனாதிபதி மக்ரோன் உரை! - முழு தொகுப்பு!!

6 பங்குனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1680


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று மார்ச் 5, புதன்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி மாளிகையான எலிசேயில் வைத்து நாட்டு மக்களுக்கு விசேடமாக உரையாற்றியிருந்தார். இரஷ்யா-உக்ரேன் யுத்தம் தொடர்பில் இந்த உரை அமைந்திருந்தது.

ரஷ்யா!

”ரஷ்யா பிரான்சுக்கும் ஐரோப்பாவுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அது தனது எல்லைகளை மீறி செயற்படுகிறது. எதிர்தரப்பை அழிக்கிறது. ருமேனியா, மோல்டோவா நாடுகளின் தேர்தலில் மூளைச் சலைவை செய்கிறது. மின்னணு தாக்குதல்களை வழிப்படுத்துகிறது. மனிதாபிமானமற்று மருத்துவமனைகள் மீது தாக்குதல் மேற்கொள்கிறது. சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி அதனை உண்மை என நம்ப வைக்கிறது!” என ஜனாதிபதி மக்ரோன் மிகவும் காட்டமாக தெரிவித்தார்.

உக்ரேன்!

உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவது கட்டாயமாகும். அது நிரந்தரமாக இருக்க வேண்டும். அது உக்ரேனை வீழ்த்தாமல் நடக்கவேண்டும். அது ஐரோப்பிய படைகளின் பயன்படுத்தலூடாகவும் வரலாம். அவர்கள் சண்டைக்குச் செல்ல மாட்டார்கள். கள முனையில் முன்னுக்கு நின்று போராடச் செல்ல மாட்டார்கள். ஆனால், மாறாக சமாதானம் கையெழுத்தானவுடன், அதனை காக்க, அமைதியை தொடர்ந்து தக்க வைக்க ஐரோப்பிய இராணுவம் அங்கே நிற்கும்!” என குறிப்பிட்டார்.

ஐரோப்பா!!

”நாளை (*இன்று மார்ச் 6) Brussels நகரில் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஒன்றாக கூடுகின்றனர். அனைத்து நாடுகளும் கணக்கில் வைக்காமல் தங்களது ஆயுத ஆதரவை வழங்க முடியும். இதனால் ஐரோப்பிய ஆணையாளர்களின் தடையை உடைக்க முடியும்.” என மக்ரோன் நம்பிக்கை வெளியிட்டார்.

அமெரிக்கா!

ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு வரி அதிகரிப்பை ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது புரிந்துகொள்ள முடியாதது. அதனை தவிர்க்க நினைதேன். ஐரோப்பிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அமெரிக்கா முடிவு செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என மக்ரோன் சுட்டிக்காட்டினார்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்