Paristamil Navigation Paristamil advert login

Euromillions : €130 மில்லியன் பரிசுத்தொகை!

Euromillions : €130 மில்லியன் பரிசுத்தொகை!

6 பங்குனி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 1302


வரும் 7 ஆம் திகதி இடம்பெற உள்ள Euromillions சீட்டிழுப்பில் வெற்றித்தொகையாக €130 மில்லியன் காத்திருக்கிறது.

மார்ச் 7, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றி பெறும் நபர் €130 மில்லியன் யூரோக்களை வெல்ல முடியும் எனவும், அதற்காக 50 இலக்கங்களில் இருந்து 5 சரியான இலக்கங்களையும், 12 இலக்கங்களில் இருந்து இரண்டு நட்சத்திர இலக்கக்களையும் கணிக்க வேண்டும்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிஷ்டசாலி ஒருவர் €52.4 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார். மேலும் ஐரோப்பா முழுவதிலும் இருந்து எட்டு நபர்கள் தலா €20,632 யூரோக்களை வென்றிருந்தனர்.

அதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பிரெஞ்சு நபர் ஒருவர் €220 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****

அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு தொடர்பில் மக்கள் அவதானமாக இருத்தல் அவசியமானதாகும். இதில் பண இழப்பு, அடிமையாகுதல் போன்ற அபாயங்கள் உள்ளன. உதவிக்கு 09 74 75 13 13 எனும் இலக்கத்துக்கு அழைக்கவும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்