முகமட் அம்ராவின் ஆயுததாரி - இன்று பிரான்சுக்கு அழைத்துவரப்படுகிறார்!!
.jpg)
6 பங்குனி 2025 வியாழன் 09:00 | பார்வைகள் : 737
பிரபல போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான முகமட் அம்ராவின் ஆயுததாரி Fernando D, இன்று பிரான்சுக்கு அழைத்துவரப்பட உள்ளார்.
சென்ற வருடம் மே மாதத்தில் சிறையில் இருந்து தப்பி ஓடிய முகமட் அம்ராவுக்கு, சில ஆயுத்தாரிகள் உதவியிருந்தனர். காவல்துறையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர். குறித்த ஆயுத்தாரிகளில் ஒருவரான Fernando D என்பவர் ஸ்பெயினில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று மார்ச் 6, வியாழக்கிழமை அவர் பிரான்சுக்கு அழைத்துவரப்படுகிறார். காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு, மகிழுந்து திருட்டு என அவர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அவர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து இரு துப்பாக்கிகளும், பிரான்சில் திருடப்பட்ட ஒரு மகிழுந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்துடன், பிரதான குற்றவாளி முகமட் அம்ராவும் விரைவில் பிரான்சுக்கு அழைத்து வரப்பட உள்ளார்.