பேருந்துகளில் கட்டாயமாகும் புதிய நடைமுறை

6 பங்குனி 2025 வியாழன் 07:57 | பார்வைகள் : 201
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சிசிடிவி கமரா அமைப்புகள் பொருத்துவது கட்டாயக்கப்படவுள்ளது.
தனியார் பேருந்துகளில் சிசிடிவி கமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைய தலைவர் பி.டி.விதாரண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வீதி அனுமதிகளை பெறும்போது பேருந்து உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதுடன் முழு பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடிவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.