Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம்!!

6 பங்குனி 2025 வியாழன் 12:00 | பார்வைகள் : 508
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 5, புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue de Lisbonne வீதியில் இருந்து 00.45 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு இரு இளைஞர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தனர். அவர்களை மீட்ட மருத்துவக்குழுவினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இரு ஆயுததாரிகளை காவல்துறையினர் உடனடியாகவே கைது செய்தனர்.
கிட்டத்தட்ட 20 தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.