உக்ரேனில் களமிறங்கும் பிரெஞ்சு இராணுவ உளவுத்துறை!!

6 பங்குனி 2025 வியாழன் 13:34 | பார்வைகள் : 7044
உக்ரேனுக்கு தேவையான இராணுவ உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, பிரான்ஸ் தனது இராணுவ உளவுத்துறையை உக்ரேனுக்கு அனுப்ப உள்ளது.
பிரெஞ்சு இராணுவ அமைச்சர் Sebastien Lecornu இதனை இன்று வியாழக்கிழமை உறுதி செய்தார். அவர் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், பிரெஞ்சு இராணுவ உளவுத்துறையை உக்ரேனுக்கு அனுப்ப உள்ளது. அதேவேளை, “உக்ரைன் பயனடைய நாங்கள் அனுமதிக்கும் உளவுத்துறை தகவல்கள் எங்களிடம் உள்ளன."” எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க உக்ரேனுக்கு உதவுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளதை அடுத்து, உக்ரேனுக்கு உதவிகள் வழங்குவதை பிரான்ஸ் துரிதப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருந்தார். அதை அடுத்தே இராணுவ உளவுத்துறையையும் அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரவில் உக்ரேனில் உள்ள விடுதி ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதில் நால்வர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.