விரதம் இருக்கும் நயன்தாரா!

6 பங்குனி 2025 வியாழன் 13:33 | பார்வைகள் : 163
நடிகை நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதன் விவரங்களை தற்போது பார்ப்போம்.
நடிகை நயன்தாரா நடிக்கும் ’மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் எல். முருகன், நடிகர் ரவி மோகன், குஷ்பு உள்பட சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில், மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்க, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தை கவனிக்கிறார். இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி பணியாற்றுகிறார்.
மேலும், இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா, அபிநயா, இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் யோகி பாபு, சிங்கம்புலி, கருடா ராமு, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் இணைகின்றனர்.
இன்று நடைபெற்ற பூஜைக்கு பின்னர், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்தை ஐசரி கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து நயன்தாரா, குஷ்புவின் நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக முதலில் அருண் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது துனியா விஜய் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா கடந்த ஒரு மாதமாக விரதம் இருந்து வருவதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.