“முரண்பாட்டை தூண்டுகிறீர்கள்” பிரான்ஸ் மீது ரஷ்யா பாய்ச்சல் - பரபரப்பாகும் களநிலவரம்!

6 பங்குனி 2025 வியாழன் 15:00 | பார்வைகள் : 973
நேற்று இரவு ஜனாதிபதி மக்ரோன் ஆற்றிய உரை “மோதலை தூண்டுவதாக அமைந்துள்ளது” என ரஷ்யா கடும் தொனியில் தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். அதன்போது “மோதலை தொடர்ந்து தக்கவைப்பது போலவும், மோதலை தூண்டுவது போலவும் அவர் உரையாற்றினார்” என ரஷ்ய ஊடகப்பேச்சாளர் Dmitry Peskov காட்டாமாகத் தெரிவித்தார்.
”ரஷ்யாவில் ஏற்படும் அச்ச்சுறுத்தல் தொடர்பாக கருத்துக்களை கிரெம்ளின் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“மக்ரோனின் உரையை - அமைதியை பற்றி சிந்திக்கும் ஒரு தலைவரின் உரையாக கருத முடியாது” எனவும் அவர் சீற்றத்துடன் தெரித்தார்.
”ரஷ்யாவின் NATO விரிவாக்கம் குறித்தும் அதன் எல்லை குறித்தும் மக்ரோன் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கடுமையாக சாடினார்.
மேலும், “உக்ரேன் மோதல் ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான ஒரு மறைமுகப்போர் என கிரெம்ளின் நீண்டகாலமாக நம்பி வருகிறது. அதனை வலியுறுத்தியும் வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்