Paristamil Navigation Paristamil advert login

La Marseillaise - தேசிய கீதம்!! - சில தகவல்கள்!!

La Marseillaise - தேசிய கீதம்!! - சில தகவல்கள்!!

20 ஆனி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18344


18 ஆம் நூற்றாண்டில்... பிரெஞ்சு இராணுவ  படையின் கேப்டன்'  Claude Joseph Rouget de Lisle ஒரு பாடலை எழுதுகிறார்.  Austria மீது போர்தொடுக்கிறோம் என அறிவித்துவிட்டு, இராணுவ சிப்பாய்களுக்காக ஒரு புரட்சி பாடல் எழுதுகிறார். 
 
1792 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த பாடல் இவ்வாறு தொடங்குகிறது. 'Chant de guerre pour l'Armée du Rhin' அதாவது 'Rhine இராணுவத்தின் யுத்தப்பாடல்' என அதன் அர்த்தம். நாடி நரம்பு எல்லம் முறுக்கேற்றும் புரட்சிப்பாடல் அது. 
 
 Strasbourg நகரின் முதல் மேயரும், பல நாட்டுப்பற்று பாடல்களை எழுதியவரும் மிகப்பெரிய இசை ரசிகருமான  Philippe Friedrich Dietrich, அவருடைய விருந்தினராக வந்திருக்கும் இராணுவ தளபதி மற்றும்  இசையமைப்பாளரான Claude Joseph Rouget de Lisle இடம் ஒரு புரட்சிப்பாடல் இயற்றி தரும்படி கோருகிறார். 'யுத்த களத்தில் இராணுவ வீரர்கள் சோர்ந்துவிடும் போதெல்லாம்.. இந்த பாடல் உற்சாகத்தை தரவேண்டும்!' என கோருகிறார். 
 
அப்பிடி அவரால் 1792 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பாடல் தான் Chant de guerre pour l'Armée du Rhin பாடல். பின்னர் முதன் முதலாக இந்த பாடல் Marseillaise நகரில், இராணுவ வீரர்களுக்காக பாடப்பட்டது. அதன் பின்னர் இந்த பாடல் 'La Marseillaise' என பெயர் மாற்றம் கண்டது. 
 
அதன் பின்னர், ஜூலை 14, 1795 ஆம் ஆண்டில் இந்த பாடல் பிரெஞ்சு தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்