Paristamil Navigation Paristamil advert login

புதினா சப்பாத்தி

புதினா சப்பாத்தி

6 பங்குனி 2025 வியாழன் 14:16 | பார்வைகள் : 122


டயட் உணவு என்றாலே அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது கோதுமை உணவுப்பொருள்களே. அதிலும் முக்கியமாக சப்பாத்தியே அனைவரது டயட் டின்னராக இருக்கும். சப்பாத்தியிலேயே புதுசா ஒரு டிஷ் ட்ரை பண்ணி பாக்கலாமா. புதினா சப்பாத்தி எப்படி செய்வது எப்படினு இந்த பதிவில தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

புதினா இலைகள் - 2 கைப்பிடி

மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்

சீரகத்தூள் - ½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

புதினா இலைகளை நல்லா கழுவி மிக்ஸில விழுதா அரைச்சுக்கோங்க. ஒரு பாத்திரத்துல கோதுமை மாவு, புதினா விழுது, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பச்சை மிளகாய் விழுது எல்லாத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊத்தி நல்லா பிசைஞ்சு வைங்க.

சப்பாத்தி கல்லை அடுப்புல வச்சு சூடாக்கிக்கோங்க. பிசைஞ்சு வச்சிருக்கிற மாவை சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி, கோதுமை மாவைத் தொட்டு சப்பாத்தியா தேய்க்கணும். சூடான தவா மீது சப்பாத்தியை போட்டு, ரெண்டு பக்கமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கணும். இந்த புதினா சப்பாத்தியை விருப்பப்பட்ட சப்ஜி அல்லது பூந்தி ரைத்தாவுடன் சாப்பிடலாம்.

சப்பாத்தி தேய்க்கும் போது, சப்பாத்தி கல்லுல ஒட்டாம இருக்க கொஞ்சம் மைதா மாவை பயன்படுத்தி தேய்க்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்