உக்ரேன் யுத்தம்.. பிரான்ஸ்-பிரித்தானியா ஏற்பாட்டில் உச்சிமாநாடு! - இறுதிக்கட்ட தகவல்கள்!

6 பங்குனி 2025 வியாழன் 17:25 | பார்வைகள் : 933
உக்ரேன் யுத்தம் தொடர்பில் Brussels நகரில் உச்சிமாநாடு ஒன்று இடம்பெற்று வருகிறது. 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
மாநாட்டில் உரையாற்றிய உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி (Volodymyr Zelensky) ஐரோப்பாவுக்கு நன்றி தெரிவித்தார். இதுவரை செய்த உதவிகளுக்கும், தற்போது உக்ரேனில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொண்டுள்ள இந்த மாநாட்டுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
**
அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினைச் சந்திப்பேன் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இருவருக்குமிடையிலான முந்தைய சந்திப்பு வாக்குவாதத்தில் முடிவடைந்த நிலையில், அமெரிக்கா கேட்கும் கனிமவள ஒப்பந்தத்தில் உக்ரேன் கைச்சாத்திடும் என எதிர்பார்க்கப்படடுள்ளது.
***
உக்ரேனுக்கு பிரித்தானியா 30 மில்லியன் பவுண்ட்ஸ் (35.7 மில்லியன் யூரோக்கள்) பெறுமதியுடைய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்ஸ்) வழங்குவதாக அறிவித்துள்ளது. துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடிய இவ்வகை ட்ரோன்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டுகிறது.
***
”உக்ரேனில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது!” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
***
உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த விரும்பும் நாடுகள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறைகூவல் விடுத்திருந்தார். அவ்வாறான நாடுகளின் தலைமை அதிகாரிகளுடன் வரும் மார்ச் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மக்ரோன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
***