”புட்டினை திருத்த முடியாது!” - மக்ரோன் சீற்றம்!

7 பங்குனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1349
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை திருத்த முடியாது. அவர் எப்போதும் ஏகாபத்தியவாதிதான்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சீறியுள்ளார்.
நேற்று Brussels நகரில் இடம்பெற்ற அவசர உச்சிமாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். NATO சார்பு மற்றும் உக்ரேனுக்கு சார்பான நாடுகள் அதில் பங்கேற்று பல்வேறு உதவிகளை வழங்குவதை உறுதி செய்தனர்..
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாற்றும் போது, ”ஐரோப்பாவில் இன்று நான் காணும் ஒரே ஏகாபத்திய சக்தி ரஷ்யா மட்டுமே எனவும் அவர் ஒரு திருத்தமுடியாத ஏகாபத்தியம் கொண்டவர் எனவும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும், “அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை என்னால் காட்டிக்கொடுக்க முடியும்.” எனவும் சீறினார்.
“ஐரோப்பாவுக்கு புட்டின் ஒரு நிரந்தரமான அச்சுறுத்தலாக இருப்பர். நாம் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும்,.மேலும் அடுத்த சில ஆண்டுகளில் ஐரோப்பியர்களுக்கான தன்னாட்சிப் பாதுகாப்பு திறன்களை உருவாக்க வேண்டும்!” எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.