”நாங்கள் விசுவாசமான கூட்டாளிகள்!” ட்ரம்பை அழைத்த மக்ரோன்!!

7 பங்குனி 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 2194
”நாங்கள் மிகவும் விசுவாசமான உண்மையான கூட்டாளிகள். ஒருவருக்கொருவர் உதவி தேவைப்படும் போது அங்கு நாங்கள் இருப்போம்!” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்பிற்கு பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பதிலளித்துள்ளார்.
ஐரோப்பா மீது ட்ரம்ப் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் வைத்து வருகிறார். ஐரோப்பிய நாடுகளினால் உக்ரேனை பாதுகாக்க முடியாது எனவும் அவர் விமர்சிருந்தார். இநிலையில், நேற்று பெல்ஜிய தலைநகர் Brussels இல் இடம்பெற்ற உச்சிமாநாடு நிறைவடைந்ததும், ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்க ஜனாதிபதியை தொலைபேசி வழியாக அழைத்து உரையாடியிருந்தார்.
அதன்போதே மக்ரோன் மேற்படி கருத்தை வெளியிட்டார். அமெரிக்கா மற்றும் அதன் தலைவர்களிடம் பிரான்ஸ் மரியாதை மற்றும் நட்பை உணர்ந்துள்ளதாகவும், அதையே கோரும் உரிமையும் அதற்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.