Paristamil Navigation Paristamil advert login

டெஸ்லா விற்பனையகம் மீது தாக்குதல்.. மகிழுந்துகள் தீக்கிரை!!

டெஸ்லா விற்பனையகம் மீது தாக்குதல்.. மகிழுந்துகள் தீக்கிரை!!

7 பங்குனி 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 8256


எலான் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா விற்பனையகம் மீது சில விஷமிகள் தாக்குதல் மேற்கொண்டனர். பல மகிழுந்துகள் எரியூட்டப்பட்டுள்ளன.

இச்சம்பவம் மார்ச் 2 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. Toulouse இற்கு அருகே உள்ள Plaisance-du-Touch நகரில் அமைந்துள்ள டெஸ்லா மகிழுந்து விற்பனையகம் மற்றும் அதில் அமைக்கப்பட்டிருந்த மின்னேற்றி நிலையம் இரண்டும் மீது எரிகுண்டுகள் வீசப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இதில் 12 மகிழுந்துகள் சேதமடைந்துள்ளன. மின்னேற்றி நிலையம் முற்றாக எரிந்துள்ளன.

அண்மைய நாட்களில் டெஸ்லா நிறுவனம் மீதும், எலான்ஸ் மஸ்கின் வியாபாரங்கள் மீதும் தீவிர வலதுசாரிகள் கடும் போக்கினை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக X சமூகவலைத்தளம் மீதும் இந்த எதிர்ப்பு குரல் பதிவாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே இந்த டெஸ்லா விற்பனையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்