ஐரோப்பிய பெண்ணிடம் லஞ்சம் கோரிய இலங்கை பொலிஸ்

7 பங்குனி 2025 வெள்ளி 07:38 | பார்வைகள் : 568
கொழும்பில் வெளிநாட்டு பெண்ணிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் சார்ஜென்ட் மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது.
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த ஒஸ்ட்ரிய நாட்டு பெண்ணிடம் ரூ. 50,000 இலஞ்சமாக பெற முயற்சித்த வேளையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குறித்த வௌிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இவர்கள் இவ்வாறு இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.