Paristamil Navigation Paristamil advert login

■ Eurostar ரத்து!

■ Eurostar ரத்து!

7 பங்குனி 2025 வெள்ளி 10:31 | பார்வைகள் : 2179


கார்-து-நோர் தொடருந்து நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, Eurostar சேவைகள் இன்று இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் இருந்து லண்டன், லண்டனில் இருந்து பரிஸ், பரிசில் இருந்து Bruxelles மற்றும் Bruxelles இல் இருந்து பரிசுக்கு வரும் அனைத்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை Gare du Nord நிலையத்தின் தண்டவாளத்தில் இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த ஒரு மீற்றர் நீளமுடைய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, காலை முதலே அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாலை வேளைகளில் பயணிக்கும் Eurostar சேவைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அச்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Bruxelles தொடக்கம் Marne La Vallée, Londres தொடக்கம் Bruxelles மற்றும் Londres தொடக்கம் Amsterdam வரையான சேவைகள் இயங்கும் என Eurostar அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்