Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois இல் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி.. இரண்டாமவர் காயம்!!

Aulnay-sous-Bois இல் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி.. இரண்டாமவர் காயம்!!

7 பங்குனி 2025 வெள்ளி 14:00 | பார்வைகள் : 1614


Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Cité de l'Europe பகுதியில் நேற்று இரவு பெரும் வன்முறைச்ச் சம்பவம் இடம்பெற்றதாகவும், மூன்று வாகனங்கள் மற்றும் 8 குப்பைத்தொட்டிகள் எரிக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளது. 00.30 மணி அளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர்.

அங்கு 24 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டதோடு,, மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக Rue de Lisbonne வீதியில் அதே நாளில் நள்ளிரவு 00.45 மணி அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்திருந்த செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம். இரு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கும் சில நிமிட இடைவெளியில் இடம்பெற்றிருந்தன. இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் Aulnay-sous-Bois நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்