Paristamil Navigation Paristamil advert login

சென் நதியில் மிதந்த காவல்துறையினரின் சடலம்!!

சென் நதியில் மிதந்த காவல்துறையினரின் சடலம்!!

7 பங்குனி 2025 வெள்ளி 15:00 | பார்வைகள் : 2133


ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட காவல்துறை வீரர் ஒருவரது சடலம் சென் நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மார்ச் 5, புதன்கிழமை பாதசாரி ஒருவர் காவல்துறையினருக்கு தெரிவித்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். pont de Sully மற்றும் le pont Marie பாலங்களுக்கு அருகே சென் நதியில் மிதந்த சடலத்தை விரந்து மீட்டனர்.

அது 47 வயதுடைய காவல்துறை வீரர் ஒருவரது சடலம் எனவும், அவர் கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி அன்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் - சில மாதங்கள் முன்னர் விவாகரத்தானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவரது தலையில் துப்பாக்கிச்சூடு பதிவானதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்