Paristamil Navigation Paristamil advert login

ஞானசேகரன் கூட்டாளி கைது! திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது அம்பலம்

ஞானசேகரன் கூட்டாளி கைது! திருட்டு வழக்கில் தொடர்பு இருப்பது அம்பலம்

7 பங்குனி 2025 வெள்ளி 18:58 | பார்வைகள் : 170


ஞானசேகரன் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஞானசேகரன். இந்த சம்பவத்தில் மாணவியை மிரட்டும்போது செல்போனில் ஒருவரிடம் சார் என்று கூறி பேசியதாக கூறப்பட்டதால் இந்த விவகாரம் பெரும் பேசு பொருளானது.

இந்த சம்பவத்துக்கும், சார் என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. யார் அந்த சார்? என்பது தெரியவேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் இறங்கின.

கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகளை சென்னை பள்ளிக்கரணை போலீசார் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், ஞானசேகரன் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

2022ல் 2 திருட்டு சம்பவங்களை பொள்ளாச்சி முரளி அரங்கேற்றியதாக போலீசர் கூறி உள்ளனர். இதே வழக்கில் ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்