'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது?

7 பங்குனி 2025 வெள்ளி 13:20 | பார்வைகள் : 3630
தளபதி விஜய் நடித்து வரும் 69ஆவது திரைப்படமான "ஜனநாயகம்" படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி, இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில் "நான் ஆணையிட்டால்" என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததை அடுத்து, மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக ஜூன் மாதம் இந்த படத்தை முடிக்க குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், அனேகமாக பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என்ற நிலையில், ஜனவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்வதே சரியான நேரமாக இருக்கும் என்று படக் குழுவினரும் விஜய்யும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் படப்பிடிப்பு முடிந்து, வரும் ஜூலை மாதம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மாநாடுகள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் உள்ளிட்ட அரசியல் கட்சி பணிகளை விஜய் கவனிப்பார் என்றும், ஜனவரி மாதம் படம் ரிலீஸ் ஆனவுடன் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரப் பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1