எதிர்பார்த்திராத அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையான ‘நெப்போலியனின் சட்டப்புத்தகம்!”
7 பங்குனி 2025 வெள்ளி 14:21 | பார்வைகள் : 10802
பரிசில் நேற்று மார்ச் 6, வியாழக்கிழமை இடம்பெற்ற ஏல நிகழ்வு ஒன்றில் மாவீரன் நெப்போலியனின் சட்டப்புத்தகம் ஒன்று ஏலத்துக்கு விடப்பட்டது.எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் விற்பனையானது.
”Code civil de Napoléon” எனும் இந்த புத்தகம் புரட்சிக்கு முந்தைய சட்டப்புத்தகமாகும். நெப்போலியனால் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டே பல்வேறு நாடுகளில் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மிக அரிதான பொக்கிஷமான இந்த புத்தகமே நேற்று 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Tajan ஏல நிலையத்தில் விற்பனைக்கு விடப்பட்டது.
அதன் ஆரம்ப தொகையாக €80,000 யூரோக்கள் அறிவிக்கப்பட்டது. அது அதிகபட்சமாக 100,000 யூரோக்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 395,000 யூரோக்களுக்கு விற்பனையானது.
இந்த தொகை எவருமே எதிர்பார்த்திராதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan