Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு விமானங்கள் ரஷ்யா மீது தாக்குதல்..!!

பிரெஞ்சு விமானங்கள் ரஷ்யா மீது தாக்குதல்..!!

7 பங்குனி 2025 வெள்ளி 17:00 | பார்வைகள் : 4223


பிரான்சின் போர் விமானங்கள் ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ரஷ்ய-யுக்ரேன் யுத்தத்தில் பிரான்ஸ் விமானங்களை களத்தில் இறக்கியுள்ளது.

பிரான்சின் ”Mirage 2000” ரக விமானங்கள் நேற்று மார்ச் 6, வியாழக்கிழமை - ரஷ்யா மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளன. ரஷ்யா மீது அவ்வகை விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது இது முதன் முறையாகும்.

யுக்ரேனிய இராணுவத்துக்கு பிரான்ஸ் போர் பயிற்சியினை வழங்கியிருந்தது. பிரான்சில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு கடந்த ஜனவரியில் யுக்ரேன் இராணுவத்தினர் நாடு திரும்பியிருந்தனர். அத்துடன் யுக்ரேனுக்கு குறித்த பிரெஞ்சு போர் விமானமான Mirage 2000 ஜெட் விமானங்களையும் வழங்கியிருந்தது. 

அதனையே நேற்று முதன்முறையாக யுக்ரேன் யுத்தத்துக்கு பயன்படுத்தியிருந்ததாக யுக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.
**

Mirage 2000 விமானமானது ஒற்றை இயந்திரம் கொண்ட எடை குறைந்த சிறிய போர்விமானமாகும். 1978 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் அதனைப் பயன்படுத்தி வருகிறது. இதுவரை ஒன்பது நாடுகளில் இந்த விமானம் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது பத்தாவது நாடாக யுக்ரேன் அதனை பயன்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்