Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனுடன் உரையாடிய ட்ரம்ப்! - ”யுத்தத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என தெரியவில்லை! என சீற்றம்!

மக்ரோனுடன் உரையாடிய ட்ரம்ப்! - ”யுத்தத்தை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என தெரியவில்லை! என சீற்றம்!

8 பங்குனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 2000


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று மார்ச் 7, வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசிவழியாக உரையாடியதாக எலிசே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரம்புடன் உரையாவிட்டு அதை அடுத்து யுக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கியுடனும் உரையாடியுள்ளார். ரஷ்யா - யுக்ரேன் யுத்தத்தில் அமெரிக்காவை யுக்ரேன் பக்கம் இழுப்பதற்கு ஐரோப்பா பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ட்ரம்ப் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ரஷ்யா-யுக்ரேன் என இரு தரப்பையும் கடும் போக்காக விமர்சித்து வருகிறார்.

நேற்று மாலை அவர் தெரிவிக்கும் போது, “ஐரோப்பியர்களுக்கு யுக்ரேன் போரை எப்படி முடிவுக்கு கொண்டுவருவதென்றே தெரியவில்லை” என சாடினார்.

அதேவேளை, “யுக்ரேனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளுவதை விட ரஷ்யாவுடன் இலகுவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்!” எனவும் கடிந்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்