கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

9 பங்குனி 2025 ஞாயிறு 05:23 | பார்வைகள் : 171
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம், 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீரபெருமாளிடம் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, வரும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராகும் படி, வீர பெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.