2026ல் தி.மு.க. அரசை மாற்றுவோம் - த.வெ.க. தலைவர் விஜய்

9 பங்குனி 2025 ஞாயிறு 10:31 | பார்வைகள் : 2105
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது,
எல்லோருக்கும் வணக்கம் . இன்று மகளிர் தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என அத்தனைபேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே.
பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது, எந்த சந்தோஷமும் இருக்காதுதானே? அப்படியென்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய?