Paristamil Navigation Paristamil advert login

800 யுக்திகளை பயன்படுத்தி முகமட் அம்ரா கைது! : மேலும் 20 பேருக்குச் சிறை!

800 யுக்திகளை பயன்படுத்தி முகமட் அம்ரா கைது! : மேலும் 20 பேருக்குச் சிறை!

8 பங்குனி 2025 சனி 07:50 | பார்வைகள் : 1900


போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியான முகமட் அம்ரா தப்பி ஓடியதன் பின்னர், ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர், இரு வாரங்களின் பின்னர் பரிஸ் வழக்கறிஞர் அலுவலகமும், தேசிய காவல்துறையினரும் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நேற்று மார்ச் 7 ஆம் திகதி மேற்கொண்டனர்.

அதன் போது சில முக்கிய தகவல்களை அவர்கள் வெளியிட்டனர்.

Incarville  (Eure) சுங்கச்சாவடியில் வைத்து ஆயுததாரிகளால் கவசவாகம் மீது தாக்குதல் நடத்தில் முகமட் அம்ப்ரா தப்பிச் சென்றிருந்தான். இந்த தாக்குதலில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

பின்னர், ஒன்பது மாதங்கள் கழித்து, ருமேனியாவின் Bucharest நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 

போதைப்பொருள் கடத்தல், கொலை வழக்கு, கொலை முயற்சி, தப்பி ஓடியமை, திருட்டு, தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்தமை, திட்டமிடப்பட்ட குற்றங்களை செய்தமை என பல்வேறு பிரிவுகளில் மிக இறுக்கமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 3, திங்கட்கிழமை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இந்த வழக்கில் 35 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 20 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. 

முகமட் அம்ரா தற்போது வடமேற்கு நகரமான Condé-sur-Sarthe இல் சிறைவைக்கப்பட்டுள்ளார். பிற சிறைக்கைதிகளின் தொடர்பு இல்லாமல் தனித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அம்ராவைக் கைது செய்வதற்காக 800 வகையான சிறப்பு யுக்திகளை பயன்படுத்தியுள்ளதாகவும், 440  தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அம்ராவின் ஆயுதப்படைகளில் முக்கிய குற்றவாளியான Fernando D கைதுசெய்யப்பட்டார். அவரது தொலைபேசியும் ஒட்டுக்கேக்கப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்