அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே சீருடை! - பரீட்சாத்த நடவடிக்கை தொடர்கிறது...!!

8 பங்குனி 2025 சனி 10:10 | பார்வைகள் : 2515
பிரான்சில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரேபோன்ற சீருடையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறமை அறிந்ததே. சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் பரீட்சாத்தமாக இந்த சீருடைகள் பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
அதை அடுத்து வரும் 2025-2026 கல்வி ஆண்டிலும் இந்த நடவடிக்கையை தொடர உள்ளது. இதற்கான நிதியை அரசு மீண்டும் ஒதுக்கியுள்ளதாக தேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆ,ம் ஆண்டு கல்வி ஆண்டில் ஆரம்பித்த இந்த பரீட்சாத்த நடவடிக்கையில் பல பாடசாலைகள் ஆர்வத்துடன் இணைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் புதிய சீருடையுடன் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர்.
அதேவேளை, சில பாடசாலைகள் இதனைக் கைவிட்டுள்ளன.
எவ்வாறாயினும் நாடு முழுவதும் ஒரே சீருடையைக் கொண்டுவர அரசு முழு மூச்சாக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.