ரொனால்டோ..ரொனால்டோ என முழக்கமிட்ட ரசிகர்கள்!

8 பங்குனி 2025 சனி 10:23 | பார்வைகள் : 132
சவுதி புரோ லீக் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஷபாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
அல்-அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஷபாப் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அல் ஷபாப் (Al-Shabab) வீரர் அப்டெர்ராஸாக் ஹம்டல்லா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அய்மான் யஹ்யா (Ayman Yahya) கிறிஸ்டியானோ ரொனால்டோ பாஸ் செய்த பந்தை கோலாக (45+7) மாற்றினார்.
அடுத்த சில நிமிடங்களில் ரொனால்டோ புயல்வேகத்தில் கோல் அடித்தார். ஆனால் களநடுவர் கோல் Offside என அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரொனால்டோ அது கோல்தான் என வாதிட்டார். எனினும் நடுவர் விடாப்பிடியாக இருந்தார்.
மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "ரொனால்டோ..ரொனால்டோ" என முழக்கமிட்டனர். பின்னர் களத்தில் பேசிய நடுவர்கள் Var செக் செய்தனர். அப்போது அது Offside கோல் இல்லை என தெரிந்தது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். இது அவரது 926வது கோலாக அமைந்தது.
அல் நஸர் அணி 2-1 என முன்னிலை வகித்த நிலையில், அல் ஷபாப் வீரர் முகமது அல் ஷ்விரேக்ஹ் 67வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்கு கடைசிவரை அல் நஸர் அணியால் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.