இலங்கை செல்லும் சிவகார்த்திகேயன்!

8 பங்குனி 2025 சனி 10:56 | பார்வைகள் : 330
அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராஸி படத்தினை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.'
இப்படமானது கடந்த ஆயிரத்து 1965 காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே மதுரை, காரைக்குடி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
எனவே நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை புறப்பட்டு செல்கிறார். அதன்படி சிவகார்த்திகேயன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.