Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் புதிய பிரதமர் யார்….?- ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவின் புதிய பிரதமர் யார்….?- ஜஸ்டின் ட்ரூடோ

8 பங்குனி 2025 சனி 13:35 | பார்வைகள் : 1118


கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார். புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை (9) அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015-ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி ஏற்றார்.

கனடாவின் புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி  நாளை  ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க உள்ளது. தற்போது கனடாவின் இடைக்கால பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தினார். இதன்போது, கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக உரையாற்றியுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன்.

மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்