Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் திருமணம் செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சீனாவில்  திருமணம் செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

8 பங்குனி 2025 சனி 13:43 | பார்வைகள் : 375


சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்று திருமணம் செய்துகொள்ளுமாறு 1200 ஊழியர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து பெற்றவர்கள் உட்பட 28 – 58 வயதுடைய ஊழியர்கள் மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததை தொடர்ந்து உள்நாட்டு மனிதவள மற்றும் சமூகப் பாதுகாப்பு பணியகத்தின் தலையீட்டின் பின் அந்நிறுவனம் இவ் அறிவிப்பை நிராகரித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்