பயணிகளின் பெட்டிகளின் பதுக்கி எடுத்துவரப்பட்ட கொக்கைன்... 200 கிலோ பறிமுதல்!!

8 பங்குனி 2025 சனி 16:00 | பார்வைகள் : 1520
சாள்-து-கோல் விமான நிலையம் (Roissy-Charles-de-Gaulle) ஊடாக எடுத்துவரப்பட 200 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மார்ச் 7, வெள்ளிக்கிழமை சந்தேகத்துக்கிடமான பயணிகள் சிலர் சுங்கவரித்துறையினரால் சோதனையிடப்பட்டனர். ஆறு பேர் கொண்ட குழு ஒன்று 12 சூட்கேஸ் பெட்டிகளில் கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக அவை 200 கிலோ இருந்ததாகவும் Fort-de-France துறைமுகத்தில் இருந்து அவை பரிசின் புறநகர் பகுதி ஒன்றுக்கு கொண்டுசெல்லப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.
சுங்கவரித்துறையினர் தெரிவிக்கையில், கள்ளச்சந்தையில் கொக்கைன் போதைப்பொருள் ஒரு கிலோ 30,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு கிராம் கொக்கைன் சராசரியாக €58 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சுக்கு கொக்கைன் பிரதானமாக கொலம்பியா, பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் கொண்டுவரப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 53.5 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.