உக்ரேனின் மீது ரஷ்யா தாக்குதல் - 11 பேர் பலி

8 பங்குனி 2025 சனி 14:16 | பார்வைகள் : 554
உக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் கிழக்கு நகரமான டொனெட்ஸ்க் பகுதியிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அத்துடன், இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் எட்டு வீடுகள் மற்றும் ஒரு நிர்வாகக் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர் மீதும் ரஷ்யப் படைகள் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.