Paristamil Navigation Paristamil advert login

நாட்டுக்கோழி மிளகு பிரட்டல்

நாட்டுக்கோழி மிளகு பிரட்டல்

9 பங்குனி 2025 ஞாயிறு 03:02 | பார்வைகள் : 126


நாட்டுக்கோழி ரசம், குழம்பு, வறுவல் என பல்வேறு வகையாக சமைத்து சாப்பிட்டு இருப்போம். இருப்பினும் நாட்டுக்கோழி மிளகு பிரட்டல் என்றாலே தனி சுவைதான் 

தேவையான பொருட்கள் 2 டேபிள் ஸ்பூன் தனியா(மல்லி),1 1/2 டேபிள் ஸ்பூன் சோம்பு,3 டேபிள் ஸ்பூன் மிளகு, 4 காய்ந்த மிளகாய்,1 டேபிள் ஸ்பூன் சீரகம்,1 குழி கரண்டி நல்லெண்ணெய், பட்டை கிராம்பு, ஏலக்காய்,2 கொத்து கறிவேப்பிலை,250 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1/2 கிலோ நாட்டுக் கோழி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், கொத்தமல்லி இலை சிறிதளவு.

செய்முறை.. முதலில் கடாயில் தனியா, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை நன்கு வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் இதனை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

அதோடு நாட்டுக்கோழியை சேர்த்து, மஞ்சள் தூள் உப்பு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் மூடி போட்டு வைக்க வேண்டும். கோழி நன்கு வந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து, நன்கு பிரட்டி கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி மிளகு பிரட்டல் தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்