ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ ரசிகர்களைக் கவர தவறியதா ?

9 பங்குனி 2025 ஞாயிறு 03:15 | பார்வைகள் : 3792
தூத்துக்குடி அருகே உள்ள மீனவ கிராமம் ஒன்றில் பல ஆண்டுகளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும், மீறி கடலுக்குள் செல்பவர்கள் பிணமாகத்தான் திரும்புவார்கள் என்றும் கூறுகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த ஜிவி பிரகாஷ், சிறு வயது முதலே எப்படியாவது கடலுக்குள் செல்வேன் என அவரது தாத்தா குமரவேலுவிடம் சொல்லி வருகிறார். அதற்காக போட் ஒன்றை வாங்க நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அடாவடியாக பல வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கிறார். அதோடு அந்த மீனவ கிராமத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள சாபுமோன் அப்துசமாத் சொல்லும் வேலைகளை செய்து வருகிறார். ஒரு நாள் நடுக்கடலில் சரக்குகளை கைமாற்றும் போது கடற்படை அதிகாரிகளிடம் சிக்குகிறார். அப்போது தான் ஜி வி பிரகாஷுக்கு பெட்டிகளில் போதைப் பொருள் இருப்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்து கரை வந்ததும் நேராக ரவுடி சாபுமோனை அடித்து கட்டிப்போட்டு கடலுக்குள் கடத்தி சொல்லுகிறார் ஜிவி பிரகாஷ், அப்போது கடலுக்குள் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கின்றனர். அந்த ஆபத்து என்ன? ஏன் அந்த மீனவ கிராமத்தினர் கடலுக்குள் செல்வதில்லை? இதற்கு பின்னால் இருப்பது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
அரண்மனை, பங்களா, வீடு, தண்ணீர், சப்தம் என பல வடிவங்களில் பேய்யையும், பேய் படங்களையும் பார்த்த நமக்கு கடலில் பேய் இருப்பதை வித்தியாசமாக சொல்லி உள்ளார் இயக்குனர் கமல் பிரகாஷ். கடலில் உள்ள கடல் அட்டை பூச்சிகளை எடுத்து விற்பனை செய்வது போல் கடலுக்கு அடியில் இருக்கும் தங்கத்தை வைத்து ஹாரர் படத்தை கொடுத்துள்ளார். முதல் பாதி முழுவதும் சாதாரணமான மீனவப்படம் போலும், இரண்டாம் பாதி முழுவதும் நடுக்கடலில் பேய் படமாகவும் கொடுத்து பயமுறுத்துகிறார் இயக்குனர்.
டைட்டில் ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். மீனவ கிராமத்து இளைஞனுக்கு உண்டான நடை உடை பாவனைகளுடன் தூத்துக்குடி ஸ்லாங்கையும் அழகாக பேசி அசத்தியுள்ளார். திவ்யபாரதிக்கு படத்தில் பெரிதாக கேரக்டர் எதுவும் இல்லை என்றாலும் ஜிவி பிரகாஷ் உடன் இரண்டாம் பாதி முழுவதும் வருகிறார். ஜிவி பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல், சாபுமோன் ஆகியோர் மிரட்டலான நடிப்பை தந்துள்ளனர்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
இந்நிலையில் படம் ரிலீஸானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. படத்தில் பேயைக் காட்டினால் பயம் வரணும். சிரிப்பு வரக் கூடாது என நெகட்டிவ்வான ட்ரோல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதே போல ரசிகர்களையும் பெரியளவில் இந்த படம் திரையரங்குக்குள் இழுக்கவில்லை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1