பிரான்சில் உள்ள ரஷ்ய சொத்து.. €195 மில்லியன் யுக்ரேனுக்கு அனுப்பப்படுகிறது!

9 பங்குனி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 1516
பிரான்சில் உள்ள ரஷ்யாவுக்குச் சொந்தமான சொத்துக்களில் இருந்து €195 மில்லியன் யூரோக்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை இத்தகவலை ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் Sébastien Lecornu அறிவித்தார். ரஷ்ய-யுக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து பிரான்சில் உள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன. அந்த சொத்துக்களுக்கான ‘வட்டி’யில் இருந்து இந்த தொகை எடுக்கப்பட்டதாகவும், அந்த தொகைக்கு பெறுமதியான ஆயுதங்களை யுக்ரேனுக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்.
AASM எனப்படும் நீண்டதூரம் இலக்கு வைத்து பாயும் வெடிகுண்டுகள், 155 மி.மீ ஷெல் குண்டுகள் போன்றவற்றை வழங்க உள்ளதாகவும், இவற்றை ஏலவே பிரான்ஸ் வழங்கியிருந்த Mirage 2000s ஜெட் ரக போர் விமானங்களில் பொருத்தி பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.