கோலி, ரோஹித் ஒலிம்பிக்கில் ஆட வேண்டும் - இந்திய அணியின் முன்னாள் வீரர் வேண்டுகோள்

9 பங்குனி 2025 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 372
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒலிம்பிக்கில் ஆட வேண்டும் என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்றும், அதிக ரன்கள் குவித்து விராட் கோலி கோல்டன் பேட் வெல்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதும், அணியின் முக்கிய வீரர்களான, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தும், இரு வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், இரு வீரர்களும் ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. தயவு செய்து அவர்களை தொடர்ந்து விளையாட விடுங்கள்.
2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதில் விராட், ரோஹித் போன்ற ஒலிம்பியன்கள் நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வதை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற உள்ளது.
ஏற்கனவே 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றது.
இதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே பங்கு பெற்றதில், 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றது.