Paristamil Navigation Paristamil advert login

6 மாருதி கார்களின் விலையில் ஒரு சூப்பர் பைக்கை வெளியிட்டுள்ள Ducati...!

6 மாருதி கார்களின் விலையில் ஒரு சூப்பர் பைக்கை வெளியிட்டுள்ள Ducati...!

9 பங்குனி 2025 ஞாயிறு 09:37 | பார்வைகள் : 155


இந்தியாவில் புதிய 2025 Ducati Panigale V4 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்தாலிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி, இந்தியாவில் அதன் 2025 Panigale V4 மொடலை வெளியிட்டுள்ளது.

MotoGP மற்றும் Superbike World Championship போட்டிகளில் டுகாட்டியின் வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த புதிய பைகில் மேம்பட்ட aerodynamics, குறைந்த எடை மற்றும் அதிக சக்தி வழங்கும் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய Panigale V4 Ducati Corse குழுவின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டதோடு, அதில் புதிய எலக்ட்ரானிக் கட்டுப்பாடு, மேம்பட்ட சாஸி அமைப்பு உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

1:15 hp/kg என்ற அபாரமான ower-to-weight விகிதத்தைக் கொண்டுள்ளதால், இது புதியவர்களுக்கும், ப்ரோ ரைடர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும்.

டுகாட்டி இந்தியாவின் மேனேஜிங் டைரக்டர் பிபுல் சந்திரா, "Panigale V4 என்பது ஒரு கிடைக்கப்பெரிய பைக், உலகளவில் ரேஸிங் டிராக்களில் அதிசயிக்க வைக்கும் திறனைக் கொண்டது.

இந்தியாவில் பெருமளவில் வளர்ந்து வரும் high-performance engine பைக்குகளுக்கான ஆர்வத்துக்கு இது ஒரு முக்கியமான அறிமுகம்," எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய Ducati Panigale V4 மற்றும் V4 S மொடல்கள் டுகாட்டி ஷோரூம்களில் தற்போது கிடைக்கின்றன.

Panigale V4 விலை ரூ. 29.99 லட்சம், மற்றும் V4 S விலை ரூ. 36.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் குறைந்தபட்ச விளையான ரூ. 29.99 லட்சத்தில், 5 முதல் 6 புதிய Maruti Alto K10 கார்களை வாங்கமுடியும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்